அனிதா-பாலா இடையே மோதல்: இந்த வாரம் ஜெயிலுக்குப் போவது யாரு?
அனிதா-பாலா இடையே மோதல்: இந்த வாரம் ஜெயிலுக்குப் போவது யாரு?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் டாஸ்குகள் விளையாடியதன் அடிப்படையிலும் மற்ற வேலைகளை செய்ததன் அடிப்படையிலும் இரண்டு சிறந்த போட்டியாளர்கள் மற்றும் இரண்டு மோசமான போட்டியாளர்கள் தேர்வு செய்யப்படுவது வழக்கம். அதேபோல் ஒட்டுமொத்தமாக சிறப்பாக செயல்பட்ட ஒருவரை தேர்ந்தெடுப்பதும் உண்டு.

இந்த நிலையில் இரண்டாவது ப்ரோமோவின் வீடியோவில் மோசமான போட்டியாளர் தேர்வு செய்யப்படும் காட்சிகள் உள்ளன. அதில் அனிதா பாலாவை நாமினேட் செய்கிறார். அவர் கூறும் காரணம் கேபி துங்கும்போது கேப்டனாக பாலாஜி அதனை கேள்வி கேட்டார் என்றும், ஆனால் ஷிவானி தூங்கும் போது ஒன்றுமே சொல்லவில்லை என்றும் அதனால் போட்டியாளர்களிடையே அவர் வேறுபாடு பார்க்கின்றார் என்றும் கூறுகிறார்.இதற்கு விளக்கம் அளிக்க பாலாஜி முயன்றபோது, நாமினேட் செய்யும் போது எனக்கு என்ன தோன்றுகிறதோ அதைத் தான் நான் சொல்ல முடியும் என்றும் நாமினேட் செய்யும் போது இடையூறு செய்யக்கூடாது என்றும் நீங்களே சொல்லி விட்டு அந்த விதிகளை நீங்களே மீறலாமா என்றும் பாலாவிடம் அனிதா கேட்கிறார். அனிதா, பாலா இடையே நடந்த இந்த காரசாரமான விவாதத்தை அடுத்து இந்த வாரம் ஜெயிலுக்கு செல்வது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் சிறப்பான மற்றும் மோசமான போட்டியாளர் ஒருவரை தேர்வு செய்யும்போது அந்த வாரத்தில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் கணக்கில் கொள்ள வேண்டும் என கமல்ஹாசன் அடிக்கடி கூறி வந்தபோதிலும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு மற்றும் ஒரே ஒரு நிகழ்வினை மட்டுமே வைத்து மோசமான போட்டியாளரை மீண்டும் தேர்வு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திருந்தாத போட்டியாளர்களை கமல்ஹாசன் வரும் சனிக்கிழமை திருத்துவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
#Day81 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/SO18oXtvy3
— Vijay Television (@vijaytelevision) December 24, 2020