கன்னியாஸ்திரியை பற்றி சர்ச்சையாக சித்தரித்த மலையாள படம் - கேரள கிறிஸ்துவர்கள் கொதிப்பு
மலையாளத்தில் உருவாகியுள்ள 'லெஸ்பியன்' படத்திற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

மலையாளத்தில் உருவாகியுள்ள 'லெஸ்பியன்' படத்திற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
மலையாளத்தில் அசோக் ஆர்.நாத் என்பவர் இயக்கி உள்ள படம் ஹோலி உண்டு, இந்த படத்தில் அமிர்தா வினோத், ஜானகி சுதிர் ஆகியோர் லெஸ்பியனாக நடித்துள்ளனர். இந்த படம் வருகிற ஆகஸ்ட் 12ம் தேதி ஓ.டி.டி தரத்தில் வெளியாக உள்ளது. மேலும் இப்படத்தின் வெளியாகி உள்ள போஸ்டர்கள் மற்றும் ட்ரைலர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளித் தோழிகளாக இருக்கும் இரு பெண்கள் ஒரு கட்டத்திற்கு மேல் தங்கள் வாழ்வில் ஏற்பட்ட கசப்பான அனுபவம் காரணமாக ஒன்று சேர்க்கின்றனர். அதில் திருமணமான பெண் ஒருவரும், வலுக்கட்டாயமாக கன்னியாஸ்திரி ஆக்கப்படும் ஒரு பெண்ணும் ஒரு கட்டத்தில் லெஸ்பியனாக மாறுவதுதான் இந்த படத்தின் கதை என்று ட்ரைலரில் காண்பித்துள்ளனர். லெஸ்பியனாக இருவரும் முத்தம் கொடுக்கும் புகைப்படங்களும் வெளியாகி கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதில் ஒரு கன்னியாஸ்திரியை லெஸ்பியனாக காட்டியதால் கேரளாவில் கிறிஸ்தவர்கள் மத்தியில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.