Kathir News
Begin typing your search above and press return to search.

ஒரே தலைப்பில் இரு படத்தின் போஸ்டர்கள் வெளியானதால் சர்ச்சை

நயன்தாரா நடிப்பில் அன்னபூரணி என்ற படத்தின் தலைப்பு வீடியோ வெளியிடப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஒரே தலைப்பில் இரு படத்தின் போஸ்டர்கள் வெளியானதால் சர்ச்சை

KarthigaBy : Karthiga

  |  25 Oct 2023 3:00 PM GMT

நடிகை நயன்தாராவின் 75 வது திரைப்படத்தின் தலைப்பு நேற்று வெளியிடப்பட்டது. நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா, சத்யராஜ்,கே. எஸ்.ரவிக்குமார், சச்சு மற்றும் பலர் நடிக்க தமன் இசையமைக்கிறார். தலைப்பு அறிவிப்பை ஒரு வீடியோவாக வெளியிட்டு இருந்தார்கள். அந்த வீடியோவும் சர்ச்சைக்குரிய விதமாக இருந்தது. ஒரு பிராமண குடும்பத்தைச் சேர்ந்த பெண் பிசினஸ் லாஜிஸ்டிக் என்ற புத்தகத்தை படிப்பது போலவும் அந்த புத்தகத்திற்குள் நான்வெஜ் சமையல் குறிப்புகளை ஒளித்து வைத்து படிப்பது போலவும் மற்றவர்களின் அனைவரும் பூஜை வழிபாட்டில் ஈடுபட்டிருப்பது போலவும் இருந்தது.


கடந்த வருடம் இதே அன்னபூரணி என்ற பெயரில் ஒரு படத்தின் தலைப்பை வெளியிட்டு இருந்தார்கள். ஜெய் பீம் படத்தில் நடித்த லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடிக்க லோஸ்லியா, ஹரி கிருஷ்ணன் மற்றும் நடிக்க லயனல் ஜோஸ்வா இயக்கத்தில் கோவிந்த் வசந்தா இசையமைக்க அன்னபூரணி என்று படத்தின் போஸ்டரையும் வெளியிட்டு இருந்தனர்.


கடந்த வருடம் அக்டோபர் 24ஆம் தேதி இப்படத்தின் முதல் பார்வையை வெளியிட்டு இருந்தார்கள். இந்த வருடம் நயன்தாரா நடிப்பில் அன்னபூரணி என்ற படத்தின் தலைப்பையும் வீடியோவையும் அதே அக்டோபர் 24ஆம் தேதி வெளியிட்டு உள்ளனர் . இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


SOURCE :Dinamalar.com

Next Story
கதிர் தொகுப்பு
Trending News