கொரோனாவுக்கு பிரபல பாடகி தபு மிஷ்ரா உயிரிழப்பு.!
தபு மிஷ்ராவுக்கு திடீரென்று ஆக்சிஜன் அளவு 45க்கும் கீழ் குறைந்தது. இதனால் வீட்டு தனிமையில் இருந்த அவரை உடனடியாக மருத்துவமனையில் உறவினர்கள் அனுமதித்துள்ளனர்.
By : Thangavelu
ஒடிசாவில் பிரபல பின்னணி பாடகியாக இருந்தவர் தபு மிஷ்ரா. இவர் இந்தி, வங்காள மற்றும் பிற மொழிகளிலும் 500க்கும் அதிகமாவ பாடல்களை பாடியுள்ளார். கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சமீபத்தில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில், தபு மிஷ்ராவுக்கு திடீரென்று ஆக்சிஜன் அளவு 45க்கும் கீழ் குறைந்தது. இதனால் வீட்டு தனிமையில் இருந்த அவரை உடனடியாக மருத்துவமனையில் உறவினர்கள் அனுமதித்துள்ளனர்.
இதனையடுத்து அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் ஆக்சிஜன் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு வேறு எந்த ஒரு இணை நோய் இல்லாமல் இருந்தது. இதனால் மீண்டும் குணமடைந்து வீடு திரும்புவார் என எதிர்பார்த்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளனர். கடந்த 9 நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் தபு மிஷ்ராவின் தந்தை உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.