சரத்குமாருக்கு கொரோனா.. ட்விட்டரில் மகள், மனைவி தகவல்.!
சரத்குமாருக்கு கொரோனா.. ட்விட்டரில் மகள், மனைவி தகவல்.!

நடிகர் சரத்குமாருக்கு கொரோனா தொற்று இருப்பதாக அவரது மனைவி, ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வரும் நேரத்தில், கொரோனா 2ம் கட்ட அலை இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் படி, தற்போது அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலருக்கு கொரோனா தொற்று பரவி வருகிறது.
இந்நிலையில், நடிகர் சரத்குமாருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. இது பற்றி அவரது மனைவி ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ” ஐதராபாத்தில் கொரோனா பரிசோதனை செய்த போது சரத்குமாருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.
அவருக்கு அறிகுறி ஏதும் இல்லை என்றாலும் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். வருகின்ற நாட்களில் அவரது உடல்நிலை குறித்து தெரியப்படுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும், இந்த பதிவை ரீ ட்வீட் செய்த சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார், “அப்பாவுக்கு கொரோனா உறுதியாகிவிட்டது. அவர் ஐதராபாத்தில் இருக்கிறார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனால் சரத்குமார் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். விரைவில் சரத்குமார் நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று அவரது கட்சியினர் மற்றும் தொண்டர்கள் கடவுளை பிரார்த்தனை செய்து வருகின்றனர்.