Kathir News
Begin typing your search above and press return to search.

முன்பதிவில் தட்டி தூக்கும் 'துணிவு'

தமிழ் படங்கள் தமிழகத்தை தவிர இதர தென்னிந்திய மாநில நகரங்களில் பெங்களூருவில் தான் அதிகமான தியேட்டர்களில் வெளியாகும்.

முன்பதிவில் தட்டி தூக்கும் துணிவு

Mohan RajBy : Mohan Raj

  |  10 Jan 2023 6:07 AM GMT

தமிழ் படங்கள் தமிழகத்தை தவிர இதர தென்னிந்திய மாநில நகரங்களில் பெங்களூருவில் தான் அதிகமான தியேட்டர்களில் வெளியாகும். வாரிசு, துணிவு ஆக இரு படங்களுமே இந்த வருட பொங்கலுக்கு அங்கு அதிக தியேட்டர்களில் வெளியாகிறது. இதற்கான முன்பதிவுகளும் பரபரப்பாக நடந்து வருகின்றன.




துணிவு படத்திற்கு அதிகாலை 2:00 மணிக்கு சிறப்பு காட்சிகள் நடக்கின்றன. அஜித் நடித்துள்ள ஒரு படத்திற்கு அதிகாலை காட்சி நடப்பது இதுதான் முதல்முறையாகும். ரஜினிகாந்திற்குப் பிறகு அஜித் நடித்துள்ள துணிவு படத்திற்குதான் அதிகாலை 2 மணிக்கு சிறப்பு காட்சிகள் நடக்கிறது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.




துணிவு படத்திற்கான 2 மணி முன் பதிவுகளில் இதுவரையிலும் லட்சுமி, கிருஷ்ணா, பாலாஜி, வைபவ் ஆகிய தியேட்டர்களில் முன்பதிவு முழுவதுமாக முடிந்து விட்டதாம். இந்த முன்பதிவுகள் மூலம் மட்டுமே 20 லட்சம் ரூபாய் வரையில் வசூல் ஆகியுள்ளது. கர்நாடகாவில் மட்டும் 40க்கும் மேற்பட்ட சிங்கிள் தியேட்டர்களிலும் 50க்கும் மேற்பட்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர்களிலும் துணிவு படம் வெளியாகிறது. மேலும் இப்படத்திற்கு பல தியேட்டர்களில் அதிகாலை 3 மணி, 4 மணிக் காட்சிகளுக்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News