கொரோனாவால் இப்படி ஒரு அவல நிலையா ? அதிர்ச்சி தகவலை வெளியிட்ட மாதவன் !
Madhavan Shares his experiance.

By : Mohan Raj
நடிகர் மாதவன் துபாய் செல்லும் விமானத்தில் தனி ஆளாக சென்ற விடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கொரோனோ'வால் மக்களின் இயல்பு வாழ்க்கை மட்டுமின்றி அயல்நாடு பயணம் செய்வோரின் வழக்கமும் மாறியுள்ளது. முன்பெல்லாம் அயல்நாடு செல்ல டிக்கெட் கிடைக்கவில்லை என்ற காலம் போய் தற்பொழுது ஒருவர் பயணம் செய்தாலே வேறு வழியின்றி விமானத்தை இயக்க வேண்டும் என்ற அவல நிலை எழுந்துள்ளது.
இந்நிலையில் தான் நடிகர் மாதவன் தனது படப்பிடிற்காக துபாய் செல்லும் விமானத்தில் தனி ஆளாக பயணம் செய்துள்ளார். அந்த வீடியோவை தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
மாதவன் தற்போது நடித்து வரும் 'அம்ரித்தி பண்டிட்' என்ற ஹிந்தி படத்தின் படப்பிடிப்பிற்காக துபாய் சென்ற போது, தான் ஒருவர் மட்டுமே பயணம் செய்ததாகவும், பறந்து விரிந்த விமான நிலையத்தில் ஒரு சிலர் மட்டுமே இருப்பதையும் வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் பகிர்ந்த வீடியோவில் பெரிய அளவிலான சொகுசு விமானத்தில் மாதவன் மட்டுமே பயணம் செய்துள்ளார், மேலும் அவர் விமான நிலையத்தில் செல்லும் இடங்களில் ஒரு சிலரை தவிர ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி இருக்கிறது. இதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்து விட்டு "இது புது விதமான அனுபவமாக இருப்பதாகவும், ஆனால் இதனை பார்க்கும் போது இந்த பேரிடர் விரைவில் சரியாக வேண்டும் என வேண்டிக்கொள்வதாகவும்" தனது கருத்தை அந்த வீடியோவில் பதிவிட்டுள்ளார் மாதவன்.
