Kathir News
Begin typing your search above and press return to search.

ஒரே பாடலுக்கு பல கோடி செலவு - பிரமாண்டமாய் ராம்சரண் படத்தை உருவாக்கும் ஷங்கர்

ராம் சரணின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர் ஷங்கர் ஒரே ஒரு பாடலுக்காக பல கோடி ரூபாய் செலவு செய்து பிரம்மாண்டமாக எடுத்து வருகிறார்.

ஒரே பாடலுக்கு பல கோடி செலவு - பிரமாண்டமாய் ராம்சரண் படத்தை உருவாக்கும் ஷங்கர்

Mohan RajBy : Mohan Raj

  |  18 Nov 2022 12:39 PM GMT

ராம் சரணின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர் ஷங்கர் ஒரே ஒரு பாடலுக்காக பல கோடி ரூபாய் செலவு செய்து பிரம்மாண்டமாக எடுத்து வருகிறார்.




ராம்சரண் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில் ராம்சரனுடன் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் ஒரு சண்டை காட்சிக்காக ஏற்கனவே 10 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்ட நிலையில் தற்பொழுது இந்த படத்தின் பாடல் படப்பிடிப்பு நியூசிலாந்தில் நடைபெற இருக்கிறது.




இங்கு படமாக்கப்பட உள்ள ஒரு பாடல் காட்சி 15 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்பதற்காக படக்குழு செலவு செய்து படமாக்கி வருகிறது. இதற்காக இயக்குனர் தீவிரமாக வேலை செய்து வருகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News