சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே விருது.. மத்திய அரசு அறிவிப்பு.!
நடிகர் திலகம் சிவாஜி, கே.பாலசந்தர் ஆகியோர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
By : Thangavelu
இந்திய சினிமாவில் சிறந்த படைப்புகளை அளித்து வரும் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தாதா சாகேப் பால்கே விருது ஒவ்வொரு ஆண்டும் திரைத்துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்து வருபவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நடிகர் திலகம் சிவாஜி, கே.பாலசந்தர் ஆகியோர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
அதே போன்று பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், மற்றும் கன்னட நடிகர் கன்னட நடிகர் ராஜ்குமார், கேரள இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர்களுக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதற்காக 51வது தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
தாதா சாகேப் பால்கே விருதை பெறும் நடிகர் ரஜினிகாந்திற்கு திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ரஜினிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.