ரசிகர்களுக்கு விருந்தாக 'அட்லி' தயாரிக்கும் அந்தகாரம்.!
ரசிகர்களுக்கு விருந்தாக 'அட்லி' தயாரிக்கும் அந்தகாரம்.!
By : Amritha J
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் அட்லி. பிரபல இயக்குனரான ஷங்கரின் துணை இயக்குனராக பணியாற்றியவர். அதன்பின் தளபதி விஜயை வைத்து மெர்சல், பிகில்,தெறி ஆகிய வெற்றி படங்களை எடுத்து அதன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர்.
இந்நிலையில் தயாரிப்பாளராக அவரது அடுத்த படைப்பான "அந்தகாரம்" படத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.மேலும் இத்திரைப்படம் நேரடியாக நெட்ஃப்லிக்ஸ் தளத்தில் இரவு 12 மணிக்கு வெளியாகிவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தகாரம் படத்தில் கைதி மற்றும் மாஸ்டர் படங்களில் நடித்திருக்கும் நடிகர் 'அர்ஜுன் தாஸ்',கீரிடம் படத்தில் அஜித்துக்கு தம்பியாக நடித்த வினோத் கிஷன் ராஜா ராணி படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்த மீஷா கோஷல், பூஜா ராமச்சந்திரன் ஆகியோரை வைத்து மிரட்டலான கதை தந்திருக்கின்றனர்.
இப்படத்தின் கதை மிகப்பெரிய அளவில் த்ரில்லர் நிறைந்த கதையாகவும், பார்ப்போரை ஆர்வத்தில் எதிர்பார்க்க வைக்கும் விதமாக கதை இருக்கிறது.இந்த படத்தை சுசி சித்தார்த் இயக்க. திரு அமுதன் ஒளிப்பதிவு செய்கிறார். அட்லீயுடன் சேர்ந்து 'Passion studios' இந்தப் படத்தை தயாரிக்கிறார்கள். மேலும் இப்படத்தில் அர்ஜுன் தாஸ், வினோத் கிஷன் இருவருக்கும் நடக்கும் ஆட்டத்தில் யார் ஜெயிக்கிறார்கள் என்பதை விறுவிறுப்பை கூட்டி இருக்கிறார்கள்.