பாலாஜி மீது பாயும் மானநஷ்ட வழக்கு : அபராதம் எவ்வளவு தெரியுமா.?
பாலாஜி மீது பாயும் மானநஷ்ட வழக்கு : அபராதம் எவ்வளவு தெரியுமா.?
By : Amritha J
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்து எதையும் பொருட்படுத்தாமல் டாஸ்க்குகளை அவமதிப்பவர் பாலாஜி மட்டும்மே. பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் வாரத்திலேயே அழகிப் போட்டி நிறுவனம் ஒன்றை சர்ச்சைக்குரிய வார்த்தைகளில் விமர்சனம் செய்தார் பாலாஜி.
அதுமட்டுமின்றி சனத்தை குறித்து பாலா அட்ஜஸ்ட்மென்ட் செய்துதான் அந்த அழகி போட்டி நிறுவனத்தில் வாய்ப்பு பெற்றதாகவும் கூறினார். இதனை அடுத்து சனம்ஷெட்டி பாலாஜியுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வாரம் சனிக்கிழமை கமலஹாசனும் பாலாஜி கண்டனம் தெரிவித்தார் என்பதும் பாலாஜி தன்னுடைய செயலுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
அதன்படி பாலாஜி விமர்சனம் செய்த அழகி போட்டி நிறுவனத்தின் ஏற்பாட்டாளர் "ஜோ மைக்கேல்" ஏற்கனவே பாலாஜிக்கு தனது கண்டனத்தை தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் அடுத்த கட்டமாக தனது நிறுவனம் மீதும் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்த பாலாஜிக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில் தனது நிறுவனத்தை தவறாக பேசியதற்காக பாலாஜி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லையேல் ரூபாய் ஒரு கோடி மான நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கறிஞர் நோட்டீஸ் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.