மாஸ்டர் படத்தில் தோனி குறித்து பேசி டெலிட் ஆன காட்சிகள் வைரல்..!
மாஸ்டர் படத்தில் தோனி குறித்து பேசி டெலிட் ஆன காட்சிகள் வைரல்..!
By : Amritha J
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு தியேட்டரில் வெளியான முதல் திரைப்படம் மாஸ்டர் படம்.மேலும் கடந்த பொங்கல் தினத்தில் வெளியாகி மிகப்பெரிய வசூலைக் குவித்தது. தியேட்டரில் வெளியான பத்து நாட்களில் 200 கோடி வசூலும்,16-நாட்களில் OTT-யிலும் வெளியாகி மக்களின் வரவேற்பையும், பலகோடி வசூலையும் பெற்றது.
அந்தவகையில் மாஸ்டர் திரைப்படம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் ரன்னிங் டைம் என்பதால் இந்த படத்தின் பல காட்சிகள் நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன. எனவே தற்போது டெலிட் ஆன சில காட்சிகள் வைரலாகி வருகின்றன. அதில் ஒரு காட்சியில் கேப்டன் தோனி குறித்து தளபதி பேசிய வசனம் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் தோனி பிரஷர் ஆகும் நேரத்தில் கூலாக முடிவு எடுப்பதால் தான் நாம எல்லோருமே அவரை கேப்டன் கூல்ன்னு கூப்பிடுறோம் என்று விஜய் வசனம் பேசும் காட்சி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதைப்பார்த்த ரசிகர்கள் அனைவரும் இதை ஏன் படத்திலிருந்து நீக்குனிர்கள் என்று ஆவேசமாக கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
HERE'S THE EXCLUSIVE DELETED SCENE FROM THE MOVIE! #MasterOnPrime@actorvijay @VijaySethuOffl @MalavikaM_ @andrea_jeremiah @imKBRshanthnu @iam_arjundas @Dir_Lokesh pic.twitter.com/oZ5zAkEYME
— amazon prime video IN (@PrimeVideoIN) February 6, 2021