Kathir News
Begin typing your search above and press return to search.

அரசியல் கதையில் களமிறங்க இருக்கும் தனுஷ்

தனுஷ் தனது ஐம்பதாவது படத்தை முடித்துவிட்டு 51 வது படத்தில் அரசியல் கதை அம்சத்தில் நடிக்க இருக்கிறார்.

அரசியல் கதையில் களமிறங்க இருக்கும் தனுஷ்

KarthigaBy : Karthiga

  |  31 Aug 2023 4:45 PM GMT

தனுஷ் 51- வது படத்தில் நடிக்க தயாராகியுள்ளார். இந்த படத்தை பிரபல தெலுங்கு டைரக்டர் சேகர் கம்முலா டைரக்டர் செய்கிறார். பட வேலைகள் தொடங்கியுள்ளன . இதில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அறிவித்துள்ளார். இந்த படம் அரசியல் கதையம்சத்தில் தயாராவதாக தகவல் கசிந்துள்ளது .


1970 மற்றும் 80களில் நடந்த அரசியலையும் அதில் மாபியா கும்பலுக்கு இருந்த தொடர்புகளையும் பேசும் படமாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது . நாகார்ஜுனா அரசியல்வாதியாக வருகிறார். தனுஷ் ஜோடியாக ராஷ்மிகா மந்தரா நடிக்கிறார். தனுஷ் கேப்டன் மில்லர் படத்தில் நடித்த முடித்துவிட்டு தற்போது தனது ஐம்பதாவது படத்தை இயக்கி நடித்து வருகிறார். படபிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த படத்தை முடித்துவிட்டு 51- வது படத்தில் நடிக்க இருக்கிறார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News