Kathir News
Begin typing your search above and press return to search.

தனுஷ் பட நடிகைக்கு விரைவில் திருமணமா? - வைரலாகும் புகைப்படம்.!

தனுஷ் பட நடிகைக்கு விரைவில் திருமணமா? - வைரலாகும் புகைப்படம்.!

தனுஷ் பட நடிகைக்கு விரைவில் திருமணமா? - வைரலாகும் புகைப்படம்.!
X

Amritha JBy : Amritha J

  |  6 Nov 2020 11:15 PM IST

தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த 'பவர் பாண்டி' என்ற படத்தில் நடித்தவர் 'மடோனா செபாஸ்டியன்'. விஜய் சேதுபதியுடன் 'கவன்' என்ற படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். மலையாள நடிகையான மடோனா 'பிரேமம்' என்ற சூப்பர் ஹிட் படத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர். அதன் பிறகு ஏராளமான படங்களில் நடித்தவர்.

தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மணப்பெண் கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதை பார்த்து அவரது ரசிகர்கள் உங்களுக்கு திருமணம் நடக்கப் போகிறதா என்று கமெண்ட் பதிவிட்டுள்ளனர். அதற்கு பதில் அளித்த மடோனா: நான் ஒரு வெப் சீரிஸில் நடிக்கப் போவதாகவும், அது ஒரு திருமண தொடர் என்றும், மேலும் இந்த வெப்சீரிஸில் பணியாற்றும் குழுவிற்கு நன்றியையும், அவர் கூறினார். ரசிகர்கள் ஆதரவு தர வேண்டியும் கேட்டுள்ளார்.

மடோனா கடைசியாக தமிழில் மணிரத்தனம் தயாரித்த 'வானம் கோட்டட்டம்' படத்தில் விக்ரம் பிரபுவுடன் ஜோடியாக நடித்தார். அவரது அடுத்த படம் எஸ்.ஆர் இயக்கிய 'கொம்பு வச்ச சிங்கடா' என்ற படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News