தனுஷின் 3வது படம் ஷூட்டிங் நிறைவு.. எந்த படம் தெரியுமா.. உற்சாகத்தில் ரசிகர்கள்.!
தனுஷின் 3வது படம் ஷூட்டிங் நிறைவு.. எந்த படம் தெரியுமா.. உற்சாகத்தில் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். இந்நிலையில் இவர் நடித்து முடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பது தெரிந்ததே.
அதேபோல் தனுஷ் நடித்து வரும் ‘அட்ராங்கே’ என்ற பாலிவுட் படத்தின் படப்பிடிப்பும் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் அந்த படமும் இன்னும் ஒருசில வாரங்களில் ரிலீசுக்கு தயாராகிவிடும். இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வந்த ‘கர்ணன்’ படத்தின் படப்பிடிப்பு லாக்டவுனுக்கு முன்னரே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
படப்பிடிப்பு முடியும் தருவாயில் திடீரென லாக்டவுன் வந்து விட்டதால் அந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 9 மாதங்களாக நடைபெறவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் கர்ணன் படத்தின் மீண்டும் தொடங்கிய நிலையில் சற்று முன் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ’கர்ணன்’ படத்தின் படப்பிடிப்பும் முடிந்து விட்டதாக அறிவித்துள்ளார்.