Kathir News
Begin typing your search above and press return to search.

தனுஷின் ஐம்பதாவது படத்தின் நாயகி இவர்தான் - வரலாற்றுப் படத்தின் வெற்றியால் மீண்டும் டாப் நடிகை ஆனார்

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்த திரிஷா புது நடிகைகளின் வரவாலும் சில தொடர் தோல்விகளாலும் சரிந்தார். பொன்னியின் செல்வனுக்கு பிறகு அவரது மார்க்கெட் மீண்டும் ஏறுமுகமாக உள்ளது.

தனுஷின் ஐம்பதாவது படத்தின் நாயகி இவர்தான் - வரலாற்றுப் படத்தின் வெற்றியால் மீண்டும் டாப் நடிகை ஆனார்

KarthigaBy : Karthiga

  |  5 Jun 2023 4:00 PM GMT

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகை திரிஷா. டாப் நடிகர்களுடன் திரிஷா ஜோடி போட்டால் அந்த படம் ஹிட் என ரசிகர்கள் முன்கூட்டியே கணித்தனர். இவ்வாறு தமிழ் சினிமாவில் பீக்கில் இருந்த திரிஷாவின் மார்க்கெட்டும் ஒரு நாள் சரிந்தது.


தொடர் தோல்வி மற்றும் வேறு நடிகைகளின் புதுவரவு திரிஷாவை வேறு மொழி படங்களை தேடி செல்ல வைத்தது. இத்துடன் திரிஷாவின் மார்க்கெட் தமிழ் சினிமாவில் காலி என்று சிலர் கைகொட்டி சிரித்த நிலையில் பொன்னியின் செல்வன் மூலம் குந்தவையாக கம்பேக் கொடுத்தார்.


இந்த வெற்றியை விடக்கூடாது என கெட்டியாக பிடித்துக் கொண்ட த்ரிஷா இப்போது தமிழில் மட்டும் கிட்டத்தட்ட ஆறு படங்களுக்கு மேல் நடித்து வருகிறார். இதில் உச்ச நட்சத்திரங்களான விஜய்யின் லியோ மற்றும் அஜித்தின் விடாமுயற்சி படங்களும் அடங்கும். அந்த வகையில் டாப் நடிகர்களின் வரிசையில் இருக்கும் மற்றொரு நடிகரின் படத்திலும் திரிஷா நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தனுஷின் ஐம்பதாவது படத்திலும் கதாநாயகியாக த்ரிஷா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News