Kathir News
Begin typing your search above and press return to search.

தளபதி விஜய் தமிழக முதல்வரை சந்தித்தாரா? பரபரப்பு தகவல்!

தளபதி விஜய் தமிழக முதல்வரை சந்தித்தாரா? பரபரப்பு தகவல்!

தளபதி விஜய் தமிழக முதல்வரை சந்தித்தாரா? பரபரப்பு தகவல்!

Amritha JBy : Amritha J

  |  28 Dec 2020 6:59 PM GMT

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இந்நிலையில் நேற்று இரவு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை தளபதி விஜய் சந்தித்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தளபதி விஜய் நடித்து முடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் பிரமாண்டமாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தமிழக முதல்வரை தளபதி விஜய் நேற்று சந்தித்ததாகவும் இந்த சந்திப்பின்போது 'மாஸ்டர்' பட விவகாரம் குறித்து இருவரும் பேசியதாகவும் கூறப்படுகிறது. மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்குகளில் திரையிட முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று விஜய் கேட்டுக் கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த சந்திப்பின்போது அமைச்சர் வேலுமணி உடன் இருந்ததாகவும், தேர்தல் நேரம் என்பதால் விஜய்யின் ரசிகர்களை கவர விஜய் தரப்பின் கோரிக்கை நிறைவேற்றப்படும் வகையில் விரைவில் திரையரங்குகளில் 100% பார்வையாளர்கள் அனுமதிக்கும் அறிவிப்பு தமிழக அரசிடம் இருந்து வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.இது பற்றிய முழுமையான தகவல் இன்னும் சில நாட்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News