Kathir News
Begin typing your search above and press return to search.

'பட விழாவுக்கு வர பணம் கேட்டேனா?'- நடிகர் விமல் விளக்கம்

விமல் நடித்துள்ள குலசாமி பட விழாவுக்கு விமல் பங்கேற்காதது குறித்து அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது பற்றி அவர் விளக்கம் அளித்துள்ளார்.

பட விழாவுக்கு வர பணம் கேட்டேனா?- நடிகர் விமல் விளக்கம்

KarthigaBy : Karthiga

  |  22 April 2023 10:15 AM GMT

சரவணா சக்தி இயக்கத்தில் விமல் கதாநாயகனாக நடித்துள்ள குல சாமி பட விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில் விமல் பங்கேற்கவில்லை. விழாவிற்கு வர விமல் தயாரிப்பாளரிடம் பணம் கேட்டு கொடுக்காததால் புறக்கணித்து விட்டதாக தகவல் பரவியது . டைரக்டர் அமீரும் விமல் வராததை கண்டித்து பேசினார்.


இந்த நிலையில் குற்றச்சாட்டுக்கு விமல் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும் போது குலசாமி படத்தை விளம்பரம் செய்யும் விழாவுக்கு நான் வர பணம் கேட்டேன் என்று சொல்வது தவறான தகவல் . டைரக்டர் அமீரை தொடர்பு கொண்டு இதனை விளக்கி விட்டேன். அன்றைய தினம் தெய்வமச்சான் பாடல் நிகழ்ச்சி இருந்தது.


அதற்கான தேதியை அந்த பட குழுவினர் ஒரு மாதத்திற்கு முன்பு என்னிடம் சொல்லி விட்டனர். ஆனால் குலசாமி பட விழா நிகழ்ச்சி பற்றி நான்கு நாட்களுக்கு முன்பு தான் என்னிடம் சொன்னார்கள் .இரண்டையும் ஒரே தேதியில் வைத்து விட்டனர் .அதனால் தான் வர முடியவில்லை. வர முடியாத காரணத்தை இயக்குனரிடமும் சொல்லிவிட்டேன் என்றார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News