Kathir News
Begin typing your search above and press return to search.

ஈஸ்வரன் படத்தின் பாம்பு பிரச்சினைக்கு சுசீந்திரன் விளக்கம் - ஏற்கப்பட்டதா?

ஈஸ்வரன் படத்தின் பாம்பு பிரச்சினைக்கு சுசீந்திரன் விளக்கம் - ஏற்கப்பட்டதா?

ஈஸ்வரன் படத்தின் பாம்பு பிரச்சினைக்கு சுசீந்திரன் விளக்கம் - ஏற்கப்பட்டதா?
X

Amritha JBy : Amritha J

  |  22 Nov 2020 4:36 PM GMT

நடிகர் சிம்பு சில வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சினிமா துறையில் களம் இறங்கி இருக்கிறார். இவர் நடிக்கும் படங்கள் இவருக்கு சில சர்ச்சைகளை ஏற்படுத்தி தான் வருகின்றன. அந்த வகையில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் "ஈஸ்வரன்". இப்படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதில், சிம்பு அவரது தோளின் மீது பாம்பை பிடித்துக் கொண்டு நிற்பது போல் இருந்தது. படத்திற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அதில் உயிருள்ள பாம்பை மரத்திலிருந்து பிடித்து சாக்குப் பையில் போடுவது போன்ற ஒரு காட்சி இருந்தது.

அதனால் சிக்கல் உருவாகி இருந்த நிலையில் வன உயிரினப் பாதுக்காப்புச் சட்டத்தின் கீழ் பாதுக்காக்க பட வேண்டிய உயிரினங்களில் சிம்பு பிடித்துள்ள பாம்பு வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972 கீழ் உள்ளதால் சிம்பு மீது வன உயிரின ஆர்வலர்கள் புகாரளித்தனர். எனவே படக்குழுவினருக்கு வன உயிரின அதிகாரிகள் பாம்பு குறித்து ஒரு காட்சிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது என்பது தெரிந்தது. எனவே இந்த நோட்டீஸ்க்கு சுசீந்திரன் தற்போது விளக்கம் அளித்து உள்ளதாகவும் அந்த விளக்கத்தை வனத்துறை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து சுசீந்திரன் வனத்துறை அதிகாரிகளிடம் நேரில் சென்று விளக்கம் அளித்தார் என்றும், ரப்பர் பாம்பு மற்றும் கிராபிக்ஸ் காட்சிகளுடன் தாங்கள் படமாக்கிய காட்சி கிராபிக்ஸ் பாம்புதான் என்றும் உண்மையான பாம்பு அல்ல என்றும் அவர் விளக்கியதாக தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் சிம்பு வைத்திருந்தது ரப்பர் பாம்பு தான் என்று உறுதி செய்த அதிகாரிகள் தத்ரூபமாக உயிர் உள்ள பாம்பை வைத்து எடுப்பது போலவே எடுத்திருக்கிறீர்கள் என படக்குழுவினருக்கு பாராட்டையும் கூறியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News