கிரிக்கெட் மட்டையை சாப்பிடுவியா.? என்று தோனிக்கு கேள்வி எழுப்பிய முன்னணி நடிகை.!
கிரிக்கெட் மட்டையை சாப்பிடுவியா.? என்று தோனிக்கு கேள்வி எழுப்பிய முன்னணி நடிகை.!
By : Amritha J
டெல்லியில் கடந்த 2 மாதங்களாக மேலாக வட மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக பல ஆதரவாளர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த நாட்களாக வெளிநாட்டு பிரபலங்களும் விவசாயிகளுக்கு ஆதரவாக அவர்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் கூறிவருகின்றனர்.
அந்த வகையில் பாப் பாடகி ரிஹானா உள்பட பல வெளிநாட்டு பிரபலங்கள் இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த நிலையில், அவர்களுக்கு பதிலடி தரும் வகையில் சச்சின் உள்பட பல கிரிக்கெட் பிரபலங்களும், கங்கனா ரனாவத் உள்பட பல திரையுலக பிரபலங்களும் குரல் கொடுத்தனர். இந்த நிலையில் விவசாயிகளின் போராட்டங்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக கூறி கடந்த 2 நாட்களாக சச்சினுக்கு எதிராகவும் சமூகவலைதளத்தில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.
சச்சினுக்கு பலர் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தற்போது தமிழ் நடிகை ரோகினி அவர்கள் அவரது சமூக வலைத்தளத்தில் சச்சினுக்கு கேள்வி ஒன்றை எழுப்பி உள்ளார். "கிரிக்கெட் மட்டையை சாப்பிடுவியா சச்சின் அதுவும் ஒரு விவசாயி வளர்த்த மரத்தில் இருந்து தான் வந்தது" என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவிற்கு சில நல்ல கமெண்ட்களும் சிலர் இந்த நடிகைக்கு எதிரான கமெண்ட்களையும் பதிவிட்டு வருகின்றனர்.