Kathir News
Begin typing your search above and press return to search.

மாமிசம் சாப்பிட்டு நர்ஸ் இறந்த விவகாரம் - தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன்

சமீபத்தில் பிரித்திவிராஜ், நயன்தாரா நடிப்பில் அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் கோல்டு திரைப்படம் வெளியானது

மாமிசம் சாப்பிட்டு நர்ஸ் இறந்த விவகாரம் - தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன்
X

Mohan RajBy : Mohan Raj

  |  6 Jan 2023 4:57 AM GMT

சமீபத்தில் பிரித்திவிராஜ், நயன்தாரா நடிப்பில் அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் கோல்டு திரைப்படம் வெளியானது .இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் என்பவர் பிரேமம், நேரம் என்கிற ஹிட் படங்களை மலையாள திரையுலகிற்க்கு கொடுத்தவர். இந்நிலையில் தற்போது கேரளாவில் ஹோட்டலிலிருந்து வரவழைத்து கெட்டுப்போன இறைச்சி உணவை கேரளா நர்ஸ் ஒருவர் சாப்பிட்டு உயிர் இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.




இதுகுறித்து இயக்குனர் கூறும்போது, எனது நண்பர் ஷராபுதீன் (பிரேமம் படத்தில் அறிமுகமானவர்) 15 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு டிரீட் கொடுக்கும் விதமாக சவர்மா வாங்கி கொடுத்தார்.இதை சாப்பிட பிறகு மருத்துவமனையில் சிகிச்சைக்காக காலையிலேயே அனுமதிக்கப்பட்டேன். கெட்டுப்போன அந்த உணவு புட் பாய்சன் ஆனது, இதிலிருந்து நான் குணமடைந்து மீண்டு வருவதற்கு கிட்டத்தட்ட 70,000 ரூபாய் வரை செலவிடப்பட்டது.

ஒரு கட்டத்தில் எனக்கு ட்ரீட் கொடுத்த ஷராபுதீன் மீதும் கூட கோபம் வந்தது. ஆனால் உண்மையான கோபம் யார் மீது வரவேண்டும்? அந்த 70,000 ரூபாய்க்கு என் பெற்றோர்கள் பல பேரிடம் கெஞ்சிக்கூத்தாடி வாங்கி செலவு செய்து என்னை கைப்பற்றினர். மீடியாக்கள் கேள்வி எழுப்ப வேண்டியது இது போன்ற விஷயங்களில்தான் என்று தன் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ள அல்போன்ஸ் புத்ரன் தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News