Kathir News
Begin typing your search above and press return to search.

மீண்டும் இணையும் இயக்குனர் ஹரி - நடிகர் விஷால்

இயக்குனர் ஹரியுடன் விஷால் ஏற்கனவே இரண்டு படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார். தற்போது மூன்றாவதாக புதிய படத்தில் இணைகிறார்.

மீண்டும் இணையும் இயக்குனர் ஹரி -  நடிகர் விஷால்

KarthigaBy : Karthiga

  |  28 April 2023 6:15 AM GMT

ஹரி இயக்கத்தில் ஏற்கனவே தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களில் விஷால் ஏற்கனவே நடித்துள்ளார் இந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. தற்போது மீண்டும் ஹரி இயக்கம் புதிய படத்தில் விஷால் நடிக்கிறார். இதில் மேலும் பல முன்னணி நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் இணைகிறார்கள். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் வழங்க ஜி ஸ்டூடியோசுடன் இணைந்து கார்த்திகேயன் சந்தானம் தயாரிக்கிறார்.


பட குழுவினர் கூறும்போது "விறுவிறுப்பான திரைகதையில் படம் தயாராகிறது. இந்த படம் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் உற்சாகப்படுத்தும் பிரம்மாண்ட செலவில் தயாராகிறது. படத்தில் பணியாற்றும் அனைவருக்குமே இது முக்கிய படமாக இருக்கும். சுவாரஸ்யமான திரைக்கதை மற்றும் பரபரப்பான கதை அம்சம் கொண்ட படமாக உருவாகிறது. படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது" என்றனர். ஹரியின் முந்தைய படங்களை போல் அதிரடி சண்டைகள் நிறைந்த குடும்ப படமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News