கட்டிய வீட்டிற்கு ஆபத்து.. வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய கே.எஸ்.ரவிக்குமார்.!
தற்போது தேர்தல் நெருங்கும் வேலையில் தனது வீட்டிற்கு பிரச்சனை என்று கூறுகிறார். அப்படி என்றால் வீட்டிற்கு பிரச்சனை செய்யக்கூடும் கட்சி எதுவாக இருக்கும் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
By : Thangavelu
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் கே.எஸ்.ரவிக்குமார், தற்போது இவர் 'கூகுள் குட்டப்பன்' என்ற படத்தை தயாரித்து வருகிறார்.
இந்த படத்தில் நடிகர் தர்ஷன் மற்றும் லாஸ்லியா உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கின்றனர். அப்படத்தை கே.எஸ்.ரவிக்குமாரின் உதவி இயக்குநர்கள் இயக்குகின்றனர். இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் கே.எஸ். ரவிக்குமார் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தனது சமூக வலைதளப்பக்கத்தில் கே.எஸ்.ரவிக்குமார் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ''எனக்கு சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்று கனவு இருந்த நிலையில், அப்படி நான் ஒரு வீட்டை கட்டியுள்ளேன்.
தற்போது அந்த வீட்டிற்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதனை எதிர்த்துக் கேட்டபோது பிரச்சனை மிகவும் பெரிதாகிவிட்டது. எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இதன் காரணமாகத்தான் சமூக வலைதளங்களில் பேசிகிறேன் என்று பதிவிட்டுள்ளார். தற்போது தேர்தல் நெருங்கும் வேலையில் தனது வீட்டிற்கு பிரச்சனை என்று கூறுகிறார். அப்படி என்றால் வீட்டிற்கு பிரச்சனை செய்யக்கூடும் கட்சி எதுவாக இருக்கும் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த வீடியோ விவகாரம் சினிமாத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து என்றால் அது திமுக மட்டும்தான் என்று அனைவருக்கும் தெரியும்.