Kathir News
Begin typing your search above and press return to search.

'ஏதே! 'கைதி' பார்த்துட்டு 'விக்ரம்' படத்துக்கு வரணுமா? - லோகேஷ் கனகராஜ் கூறிய கடைசி நிமிட சஸ்பென்ஸ்

கைதி படத்தைப் பார்த்துவிட்டு விக்ரம் படம் பாருங்கள் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஏதே! கைதி பார்த்துட்டு விக்ரம் படத்துக்கு வரணுமா? - லோகேஷ் கனகராஜ் கூறிய கடைசி நிமிட சஸ்பென்ஸ்

Mohan RajBy : Mohan Raj

  |  3 Jun 2022 6:45 AM GMT

கைதி படத்தைப் பார்த்துவிட்டு விக்ரம் படம் பாருங்கள் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.




இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாஸில், சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'விக்ரம்' இன்று திரைக்கு வந்துள்ளது. இதனை முன்னிட்டு நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அப்போது அந்த அறிக்கையில் அவர் கூறியதாவது.




'விக்ரம்' படம் துவங்கி 18 மாதங்கள் ஆகின்றன, இந்த வாய்ப்புக்கு கமல் சாருக்கு நன்றி இந்தப்படம் உங்கள் ரசிகனிடமிருந்து உங்களுக்கான பரிசாக வருகிறது. 'கைதி'யை இன்னொரு முறை பார்த்துவிட்டு விக்ரம் அழைத்துச் செல்லும் உலகிற்கு வாருங்கள். எனக் கேட்டுக்கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார். அவர் கூறியதை வைத்து பார்க்கும் பொழுது 'கைதி' படத்தின் இரண்டாம் பாகமாக 'விக்ரம்' இருக்கும் என அறிய முடிகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News