எம்.ஜி.ஆர் விட்டுவைத்தது நல்லதுதான் - பொன்னியின் செல்வன் பற்றி மணிரத்னம்
'பொன்னியின் செல்வன் எம்.ஜி.ஆர் நடிக்க வேண்டிய படம் ஆனால் அவர் நடிக்காத காரணத்தினால் எங்களுக்கு வந்துள்ளது அந்த வாய்ப்பு' என பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் மணிரத்தினம் பேசியுள்ளார்.

'பொன்னியின் செல்வன் எம்.ஜி.ஆர் நடிக்க வேண்டிய படம் ஆனால் அவர் நடிக்காத காரணத்தினால் எங்களுக்கு வந்துள்ளது அந்த வாய்ப்பு' என பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் மணிரத்தினம் பேசியுள்ளார்.
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். அப்பொழுது அதில் பேசிய இயக்குனர் மணிரத்தினம் கூறியதாவது,
'என்னோட முதல் நன்றி கல்கிக்கு நான் கல்லூரிக்கு சென்ற போது இந்த புத்தகத்தை படித்தேன். சுமார் 40 ஆண்டுகளாக இந்த புத்தகம் என் மனதில் இருக்கிறது, பொன்னின் செல்வன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்திருக்க வேண்டிய படம் 'நாடோடி மன்னன்' படத்துக்கு பிறகு அவர் 'பொன்னின் செல்வன்' படத்தை எடுக்க வேண்டியதாக இருந்தது, ஆனால் ஏதோ ஒரு காரணத்துக்காக படம் நின்று விட்டது.
இன்று தான் எனக்கு புரிந்தது எதற்காக எம்.ஜி.ஆர் படம் நின்று விட்டது என அவர் எங்களுக்காக இந்த படத்தை விட்டு வைத்து சென்றுள்ளார். இந்த படத்தை உருவாக்க பலர் முயற்சி செய்தனர் நானே மூணு முறை முயற்சி செய்தேன். இந்த படத்தை உருவாக்குவது என்பது மிகப்பெரிய பொறுப்பு என்பதை உணர்ந்துள்ளேன் குறிப்பாக கொரோனா பிரச்சினைகள் நாங்கள் இந்த படத்தை கஷடப்பட்டு முடித்துள்ளோம்' என பேசினார்.