அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் விசாரணைக்கு ஆஜரான இயக்குனர் ஷங்கர்
இயக்குனர் ஷங்கர் சென்னை மண்டல அமலாக்கத் துறை அலுவலகத்தில் வழக்கு விசாரணை ஒன்றுக்காக ஆஜரானார்.

இயக்குனர் ஷங்கர் சென்னை மண்டல அமலாக்கத் துறை அலுவலகத்தில் வழக்கு விசாரணை ஒன்றுக்காக ஆஜரானார்.
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் சென்னை ஆயிரம் விளக்கில் அமைந்துள்ள அமலாக்கத் துறை சென்னை மண்டல அலுவலகத்தில் துணை இயக்குனர் மல்லிகார்ஜுனா முன்பு விசாரணைக்காக ஆஜரானார். அங்கு அதிகாரிகள் தீவிர விசாரணை செய்தனர், பண விவகாரம் தொடர்பாக மூன்று மணி நேரம் இயக்குனர் ஷங்கரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த அமலாக்கத் துறை அலுவலக விசாரணைக்காக ஷங்கர் வந்தார் என்ற தகவல் அறிந்து பல ஊடகத்தினர் அமலாக்கத் துறை அலுவலகத்தின் முன்பு ஒன்று கூடினர் இருப்பினும் ஷங்கர் விசாரணை முடிந்தவுடன் ஊடகத்தினர் இருந்ததை அறிந்து கொண்டு அவர்களின் கண்ணில் படாமல் பின்வாசல் வழியாக காரில் ஏறி சென்றுள்ளார். இது என்ன வழக்கு எதற்காக அமலாக்க துறையினர் முன் ஷங்கர் விசாரணைக்காக ஆஜரானார் என்ற தகவல்கள் விரைவில் தெரியவரும்.