'அந்நியன்' கதை எனக்கு மட்டும்தான் சொந்தம்: இயக்குநர் ஷங்கர் அதிரடி.!
இந்த படத்தை ரீமேக் செய்வதற்கான முறையான அனுமதியை பெறவில்லை என்று ஆஸ்கார் ஆஸ்கார் ரவிச்சந்திரன் வழக்கு தொடர்கிறார். இதனிடையே இந்தியில் ரீமேக் செய்யும் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.
By : Thangavelu
அந்நியன் படத்தின் கதை தனக்கு மட்டும்தான் சொந்தம் என்று அப்படத்தின் இயக்குநர் ஷங்கர் விளக்கம் அளித்துள்ளார். தற்போது ரன்வீர் சிங் நடிப்பில் 'அந்நியன்' திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுவதாகவும், அந்த படத்தை பென் ஸ்டூடியோ தயாரிப்பதாகவும், இயக்குநர் ஷங்கர் சமீபத்தில் அறிவித்திருந்தார்.
ஆனால், இந்த படத்தை ரீமேக் செய்வதற்கான முறையான அனுமதியை பெறவில்லை என்று ஆஸ்கார் ஆஸ்கார் ரவிச்சந்திரன் வழக்கு தொடர்கிறார். இதனிடையே இந்தியில் ரீமேக் செய்யும் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்நியன் படத்தின் அனைத்து மொழிக்கான உரிமையும் என்னிடமே உள்ளது எனவும், அந்த கதையை சுஜாதா என்பவருக்கு ரூ.5 லட்சம் கொடுத்து முறையாக வாங்கியுள்ளேன் என்றும் ஆஸ்கார் ரவிச்சந்திரன் அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, இயக்குநர் ஷங்கர் 'அந்நியன்' படத்தின் கதை எனக்கே சொந்தம். அந்நியன் கதை திரைக்கதையை எழுதி தருவதற்காக நான் யாரிடமும் கேட்கவில்லை. வசனம் மட்டுமே சுஜாதா எழுதினார் என விளக்கம் கொடுத்துள்ளார். தற்போது அந்நியன் படத்தின் கதை விவகாரம் சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.