Kathir News
Begin typing your search above and press return to search.

இயக்குனர் ஷங்கரின் அடுத்த படத்தின் ஹீரோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இயக்குனர் ஷங்கரின் அடுத்த படத்தின் ஹீரோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இயக்குனர் ஷங்கரின் அடுத்த படத்தின் ஹீரோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
X

Amritha JBy : Amritha J

  |  13 Feb 2021 12:32 AM IST

தென்னிந்திய சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் இயக்குனர் ஷங்கர். இவர் தற்போது கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் தமிழக அரசு அனுமதி தந்தும் இன்னும் சூட்டிங் ஆரம்பிக்கபடாமல் இருக்கிறது.

இந்நிலையில் இயக்குனர் சங்கர் வேறு ஒரு படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஷங்கரின் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் 'ராம் சரண் தேஜா' நடிக்க இருப்பதாகவும் இது ஒரு பான் திரைப்படம் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் நிறுவனத்தின் 50-வது படமாக இப்படம் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இப்படத்தின் கதாநாயகனாக அறிவிக்கப்பட்ட ராம்சரண் பாகுபலி பட இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் RRR என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் இப்படத்தில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News