இயக்குநர் சுந்தர்சிக்கு கொரோனா தொற்று உறுதி.!
கடந்த சட்டமன்ற தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பல அரசியல் கட்சிகளின் பிரபலங்கள் மற்றும் வேட்பாளர்களுக்கு தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

By : Thangavelu
இயக்குநரும் நடிகருமான சுந்தர் சி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். நடிகை குஷ்பு ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டார். இதனால் குஷ்புவுக்காக ஆயிரம் விளக்கு தொகுதியில் சுந்தர் சி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில், நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: 'என்னுடைய கணவர் சுந்தர்சிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர், நன்றாக உள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனவே அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக தங்களை பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். அவர், விரைவில் குணமடைய பிரார்தனை செய்யுங்கள்' எனக் பதிவிட்டுள்ளார்.
கடந்த சட்டமன்ற தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பல அரசியல் கட்சிகளின் பிரபலங்கள் மற்றும் வேட்பாளர்களுக்கு தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் தொற்று நமக்கும் வந்துவிடுமோ என்ற அச்சத்திலேயே பல வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
