Begin typing your search above and press return to search.
'அங்காடித் தெரு' படத்தின் இயக்குநர் வசந்தபாலனுக்கு கொரோனா தொற்று உறுதி.!
வெயில், அங்காடித்தெரு, அரவான், காவியத்தலைவன், உள்ளிட்ட படங்கள் மட்டுமே இயக்கியவர் வசந்தபாலன். இப்படம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவைகளாகும்.

By :
வெயில், அங்காடித்தெரு, அரவான், காவியத்தலைவன், உள்ளிட்ட படங்கள் மட்டுமே இயக்கியவர் வசந்தபாலன். இப்படம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவைகளாகும்.
இந்நிலையில், இயக்குநர் வசந்தபாலனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இந்த தகவலை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: அன்புள்ள நண்பர்களுக்கு. நான் கொரோனோ பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். ஆதலால், பலருடைய தொலைபேசி அழைப்பை எடுக்க முடியவில்லை.
என் மீது பேரன்பு கொண்ட நண்பர்கள், மருத்துவர்கள், உறவினர்கள் சூழ இருக்கிறேன் என்பதே மனதிற்குள் ஆயிரம் யானை பலம் கூடி வருகிறது. ஈராறு கால்கொண்டெழும் புரவியாய் மீண்டும் எழுந்து வருவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
Next Story