Kathir News
Begin typing your search above and press return to search.

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஏமாற்றம் அடைந்த விஜய் ரசிகர்கள்

வாரிசு படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என்று நினைத்து, ரசிகர்களை ஆறுதல்படுத்த புதிய போஸ்டர் ஒன்றை மட்டுமே வெளியிட்டது வாரிசு படக்குழு.

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஏமாற்றம் அடைந்த விஜய் ரசிகர்கள்

Mohan RajBy : Mohan Raj

  |  2 Jan 2023 7:42 AM GMT

வாரிசு படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என்று நினைத்து, ரசிகர்களை ஆறுதல்படுத்த புதிய போஸ்டர் ஒன்றை மட்டுமே வெளியிட்டது வாரிசு படக்குழு.




அஜித் மற்றும் விஜய் இருவருமே தமிழ் சினிமாவின் டாப் நடிகர்கள் இந்நிலையில் இருவரின் படமும் சுமார் 9 வருடங்களுக்கு பிறகு நேருக்கு நேர் மோதவுள்ளது. அஜித் நடிப்பில் துணிவு படமும், விஜய் நடிப்பில் வாரிசு படமும் 2023 பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் துணிவு படம் ஜனவரி 11ம் தேதியும், துணிவு படம் ஜனவரி 12ம் தேதியும் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள இந்த இரண்டு படத்தின் படக்குழுவினரும் மிகப்பிரமாண்டமாக தங்களது படத்தை விளம்பரம் செய்துவருகின்றனர்.




இந்தநிலையில் நேற்று அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் டிரைலர் இரவு 7 மணியளவில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதேபோன்று வாரிசு படத்தின் டிரைலரும் வெளியாகும் என்று காத்திருந்த விஜய் ரசிகர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றம்மட்டுமே. அதிருப்தியில் இருந்த விஜய் ரசிகர்களுக்காக ஆறுதல் அளிப்பது போன்று புதிய போஸ்டர் ஒன்றை வாரிசு படக்குழு வெளியிட்டுள்ளது. ஆனால் இது ரசிகர்களின் ஏமாற்றத்தையும் மற்றும் அவர்களின் மகிழ்ச்சிக்கு தீனிபோடவில்லை என்று கூறலாம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News