அரசியல் கட்சி தொடங்க வேண்டாம்.. அன்பு கட்டளையிட்ட ரஜினி மகள்கள்.?
அரசியல் கட்சி தொடங்க வேண்டாம்.. அன்பு கட்டளையிட்ட ரஜினி மகள்கள்.?
By : Kathir Webdesk
கடந்த (டிசம்பர்) 13ம் தேதி ‘அண்ணாத்த’ படப்பிடிப்புக்காக நடிகர் ரஜினி ஐதராபாத் சென்றிருந்தார். அவருடன் அவரது மகள் ஐஸ்வர்யா தனுசும் உடன் சென்றார். ரஜினி கொரோனா பரவலின்போது தனிமைப்படுத்தப்பட்ட போதும், மருத்துவமனையிலும் ஐஸ்வர்யா மட்டும் உடனிருந்தார்.
‘அண்ணாத்த’ படப்பிடிப்பின் போது சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து ரஜினியும் தனிமைப்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் பின்னர் மருத்துவர்களின் கண்காணிப்பில் ரஜினி இருந்து வந்த நிலையில், நேற்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு ஒரு வழியாக சென்னை சென்று சேர்ந்தார்.
அப்போது ரஜினிக்கு மருத்துவர்கள் சில கட்டளையிட்டுள்ளனர். அதாவது வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். ஒரு வாரத்திற்கு ஓய்வில் இருப்பது அவசியம். மேலும், மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கொரோனா தொற்று ஏற்படும் சூழல்களை எக்காரணத்தைக் கொண்டும் உருவாக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில், உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, மன அழுத்தத்திலும் இருந்த தந்தையிடம் (ரஜினியிடம்) ஐஸ்வர்யா இந்த சூழலில் அரசியல் வேண்டாம். சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்திருப்பதால் கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டால் அது தற்போதைக்கு பெரும் ஆபத்தை உண்டாக்கிவிடும்.
இப்போதைக்கு அரசியல், கட்சிப்பணிகள் என எங்கேயும் வெளியே போகவேண்டாம். கட்சி, அரசியல் பற்றி யோசிப்பதால்தான் உங்களுக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. அதனால் இப்போதைக்கு அரசியல் வேண்டாம்பா என கெஞ்சிக்கேட்டிருக்கிறார் என்கிறார்கள் ரஜினிக்கு நெருங்கிய உறவினர்கள்.
அதே போன்று இரண்டாம் மகள் சௌந்தர்யாவும் ரஜினியிடம் இதே கோரிக்கையை வைத்துள்ளார். இருவருமே, உங்கள் உடல் நிலைதான் முக்கியம், மற்ற எந்த விஷயத்திலும் கவனம் செலுத்தவேண்டாம் என்று ரஜினியிடம் அன்பு கட்டளையிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
தற்போது மகள்களின் வேண்டுகோளை தீவிரமாக யோசித்து வருவதாகவும், அரசியல் நிலைப்பாடு குறித்து பின்னாடி அறிவிக்கவும் வாய்ப்பு உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர். ஒரு வேளை கட்சிப்பணிகள் தள்ளிப்போகவும் வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக அரசியல் நிலவரம் தினமும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது என்றே கூறலாம். அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் பலமுனை போட்டியா அல்லது மும்முனை போட்டியா என்பது பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியவரும்.