Kathir News
Begin typing your search above and press return to search.

எகிறிக் கொண்டே போகும் தளபதியின் சம்பளம் - வெங்கட் பிரபு இயக்கம படத்தில் சம்பளம் இத்தனை கோடியா?

வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் விஜய்யின் சம்பளம் ரூபாய் 200 கோடி என்று தகவல் வெளியாகியுள்ளது.

எகிறிக் கொண்டே போகும் தளபதியின் சம்பளம் - வெங்கட் பிரபு இயக்கம படத்தில் சம்பளம் இத்தனை கோடியா?

KarthigaBy : Karthiga

  |  18 May 2023 3:00 AM GMT

விஜய் நடிக்கும் 'லியோ' படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. அடுத்த மாதம் முழு படப்பிடிப்பு முடியும் இருக்கிறது. அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது. இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் புதிய படத்தை வெங்கட் பிரபு டைரக்டர் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் சொன்ன கதை விஜய்க்கு பிடித்து விட்டதாகவும் இதை அடுத்து அதில் நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது .


வெங்கட் பிரபு ஏற்கனவே பல வெற்றி படங்களை டைரக்டர் செய்துள்ளார். முதல் தடவையாக விஜய் படத்தை இயக்குகிறார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் பட நிறுவனம் தயாரிக்க முன் வந்துள்ளது. ஏற்கனவே இந்த நிறுவனம் விஜயின் பிகில் படத்தை தயாரித்து இருக்கிறது . வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்க விஜய்க்கு ரூபாய் 200 கோடி சம்பளம் கொடுக்க பட நிறுவனம் முன் வந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.


இந்திய திரை உலகில் எந்த நடிகரும் இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக பெற்றதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது . இதன் மூலம் அதிக சம்பளம் பெறும் முதல் நடிகர் என்று பெருமை விஜய்க்கு கிடைத்துள்ளது. படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News