தளபதி படத்தின் டீசர் எவ்வளவு சாதனை படைத்துள்ளது என்று தெரியுமா.?
தளபதி படத்தின் டீசர் எவ்வளவு சாதனை படைத்துள்ளது என்று தெரியுமா.?
By : Amritha J
தளபதி விஜய் தற்போது நடித்து முடித்துள்ள படம் "மாஸ்டர்". முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி, கைதி படத்தின் வில்லன் என பலர் நடித்திருக்கின்றனர்.கொரோனா காரணமாக ஆறு மாத காலங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு படங்கள் OTT-யில் வெளியாகியுள்ளன.
அந்த வகையில் மாஸ்டர் படம் குறித்து தளபதி விஜயின் ரசிகர்கள் படம் தியேட்டரில் வெளியாகும் OTT-யில் வெளியாகுமா என்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.இதற்கு பதிலளிக்கும் விதமாக மாஸ்டர் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், படம் தியேட்டரில் மட்டுமே ரிலீஸ் ஆகும் என்றும் கூறியிருந்தார்.
மேலும் ரசிகர்கள் பலர் படம் தான் ரிலீஸ் ஆக வில்லை டீஸர் ஆவது வெளியிடுவார்களா என்ற ஏக்கத்தில் கமெண்டுகளை பதிவிட்டு வந்தனர். இதனை கருத்தில் கொண்டு தளபதி ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக நேற்று மாலை 6 மணி அளவில் மாஸ்டர் படத்தின் டீசரை சன் டிவி யூடியூப் சேனல்கள் மூலம் வெளியிட்டனர்.
வெளியான ஒரு நிமிடத்திலேயே 4 லட்சம் பார்வையாளர்களை கடந்து தற்போது வரை 16 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வருகிறது.மேலும் இதை பார்த்து பல ரசிகர்கள், சமூக வலைத்தளங்களில் டீசரை பகிர்ந்து வருகின்றனர்.