'அருண்விஜய் 33' என்ற படத்தில் இசையமைப்பாளர் யார் தெரியுமா..?
'அருண்விஜய் 33' என்ற படத்தில் இசையமைப்பாளர் யார் தெரியுமா..?
By : Amritha J
ஆக்ஷன் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் அருண் விஜய். தற்போது இவர் நடிக்கும் 33-வது படம் பற்றிய ஒரு முக்கிய அறிவிப்பு வந்துள்ளது. இப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கும் நிலையில் படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் பூஜை முதலியவற்றை முடிந்து படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த தேர்வுகள் நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் மற்றும் முக்கிய கேரக்டர்களில் யோகிபாபு, ராதிகா சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஜெயபாலன், குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.அந்தவகையில் அருண் விஜய் 33 என்ற படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான டிரம்ஸ்டிக் புரடொக்சன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அருண்விஜய்யின் 33வது படமும், இயக்குனர் ஹரியின் 16-வது படமுமான எங்களது அடுத்த படத்தில் இசை அசுரன் ஜிவி.பிரகாஷ் அவர்கள் இணைந்துள்ளார் என தகவலை வெளியிட்டுள்ளனர். மேலும் தென்னிந்திய சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி,தற்போது நடிகராக வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். இவர் நடிப்பில் ஏற்கனவே 10-க்கு அதிகமாக படங்களில் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Music Director @gvprakash Part Of #AV33 & #Hari16#PrabuTaalkies Team Wishes A Very Best To The Entire Crew 💐@DrumsticksProd @arunvijayno1 @priya_Bshankar @iYogibabu @prakashraaj @realradikaa @Ammu_Abhirami @0014arun @ertviji pic.twitter.com/oPLN0oGgT6
— 🎬PrabuTalkies🎥 (@PrabuTaalkies) February 10, 2021