தீபாவளிக்கு ரிலீஸாகும் படங்கள் எவை தெரியுமா.!
தீபாவளிக்கு ரிலீஸாகும் படங்கள் எவை தெரியுமா.!
By : Amritha J
இந்தியா மட்டுமல்லாமல் பல நாடுகளில், சீனாவிலிருந்து கடந்த ஆண்டு பரவிய கொரோனா தொற்று இன்றுவரை பரவிக் கொண்டு தான் இருக்கின்றது. குறைந்தது 7 மாதங்களாக பூட்டப்பட்டு கிடக்கும் தியேட்டர்கள் 50 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்களை நவம்பர் 10 ஆம் தேதி ஆன இன்று முதல் திறக்கலாம் என்று அரசு அனுமதித்தது.
கொரோனா காரணத்தால் பல முன்னணி நடிகர்களின் நடிகைகளின் படங்கள் ஓடிடி தளத்தில் வெளியானது. ஜோதிகாவின் பொன் மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பென்குயின், விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் ஆகியவற்றைத் தொடர்ந்து தற்போது சூர்யாவின் சூரரைப் போற்று படம் இன்னும் 4 நாட்களில் வெளியாக உள்ளது.
இதனிடையே திரைப்பட தயாரிப்பாளர்களோடு திரையரங்க உரிமையாளர்களுக்கு ஏற்பட்ட விபிஎஃப் கட்டணம் தொடர்பான விவகாரத்தால் புதிய படங்கள் வெளியிடுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னதாக வெளியான சில படங்களை ரீ- ரிலீஸ் செய்ய திரையரங்குகள் முடிவு செய்துள்ளன.
இந்த தீபாவளிக்கு விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என ரசிகர்கள் பரவலாக எதிர்பார்த்த நிலையில் மாஸ்டர் பொங்கலுக்கு ரிலீஸ் என கூறப்பட்டுள்ளது. இதனால் ஏமாற்றம் அடைந்த ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும் விதமாக பிகில் திரைப்படத்தினை மீண்டும் ரிலீஸ் செய்ய உள்ளனர்.
இந்தப் படத்தினை தவிர மிகப்பெரிய ஹிட்டை கொடுத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம், விஜய் சேதுபதியின் ஓ மை கடவுளே ஆகிய திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த படத்தை இயக்கிய இயக்குநர்கள் அவர்களது ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் தியேட்டரில் வெளியாகும் படங்கள் என பதிவிட்டு வருகின்றனர்.