Kathir News
Begin typing your search above and press return to search.

விக்ரம் நடிக்கும் 60-வது படத்தின் கதாநாயகி யார் தெரியுமா..?

விக்ரம் நடிக்கும் 60-வது படத்தின் கதாநாயகி யார் தெரியுமா..?

விக்ரம் நடிக்கும் 60-வது படத்தின் கதாநாயகி யார் தெரியுமா..?
X

Amritha JBy : Amritha J

  |  19 Feb 2021 11:34 PM IST

ஆக்சன் ஹீரோ என்று அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் விக்ரம். இவர் நடிக்கும் படத்தின் கதாநாயகி யார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கவிருக்கும் திரைப்படத்தைப் பற்றிய தகவல் வந்துள்ளது.


விக்ரமின் 60-வது படம் என்பதால் இப்படத்திற்கு அதிக வரவேற்பும், எதிர்பார்ப்புகளும் கூடிக் கொண்டே வருகின்றன. இந்த நிலையில் இந்த படத்தில் நடிகை வாணி போஜன் நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்தை, லலித் குமார் தயாரிப்பில் அனிருத் இசையமைக்க உள்ளார். மேலும் விக்ரம், கவுதம் மேனனின் துருவ நட்சத்திரம், அஜய் ஞானமுத்துவின் கோப்ரா மற்றும் மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்களின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் அவர் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணைவார் என்றும் கூறப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News