பிக்பாஸ் ஆரி நடித்த 'அலேகா' படத்தின் டிரைலரில் ஆரி பெயர் என்ன தெரியுமா?
பிக்பாஸ் ஆரி நடித்த 'அலேகா' படத்தின் டிரைலரில் ஆரி பெயர் என்ன தெரியுமா?
By : Amritha J
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தற்போது மக்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்தவர் நடிகர் ஆரி. அந்த வகையில் இவருக்கு பெரும்பாலான ரசிகர்களும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் ஆரி நடித்த ‘பகவான்’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் நடித்த இன்னொரு படமான 'அலேகா' என்ற படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.
அதிரடி ஆக்ஷன் படமான இந்த படத்தில் நாயகியாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஐஸ்வர்யா தத்தா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டிரைலரின் இறுதியில் போலீசார் ஆரி அடித்து நொறுக்கி உன்னுடைய பெயர் என்ன என்று கேட்டபோது அவர் விஜய் என்று கூறுகிறார். அப்போது போலீஸ் முழுப்பெயரையும் சொல்லு என்று கூறியபோது, ஆரி, 'ஜோசப் விஜய்' என்று கூறுவதுடன் இந்த ட்ரெய்லர் முடிவடைகிறது. ஜோசப் விஜய் என்பது தளபதி விஜய்யின் முழுப்பெயர் ஆகும். இது தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.இந்த படத்தின் டிரைலர் ஆரியின் ரசிகர்களால் அதிக லைக்குகளுடன் முதலிடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
https://t.co/kc06TaKWoz ready for the trailer
— Aishwarya dutta (@Aishwaryadutta6) January 1, 2021