Kathir News
Begin typing your search above and press return to search.

'மாஸ்டர்' படத்தின் பத்து நாட்கள் வசூல் சாதனை எவ்வளவு தெரியுமா..?

'மாஸ்டர்' படத்தின் பத்து நாட்கள் வசூல் சாதனை எவ்வளவு தெரியுமா..?

மாஸ்டர் படத்தின் பத்து நாட்கள் வசூல் சாதனை எவ்வளவு தெரியுமா..?
X

Amritha JBy : Amritha J

  |  23 Jan 2021 10:34 PM IST

தளபதி விஜய் நடித்து ரசிகர்களால் அதிகம் கவரப்பட்டு, கொரோனா ஊரடங்கிற்கு பின்பு தியேட்டர்களில் ரிலீஸான முதல் படம் மாஸ்டர்.இப்படம் கடந்த 13-ஆம் தேதி பொங்கல் தின விருந்தாக தமிழகம் உள்பட உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும், வசூலிலும் சாதனை செய்து கொண்டு வருகிறது.

இப்படம் பல நல்ல கமெண்ட்களையும், விமர்சனங்களையும் பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி குடும்பம், குடும்பமாக சில நாட்களாக திரையரங்குகளில் குவிந்து வருகின்றனர். இதனால் படத்தின் வசூல் மிக அதிகமாக கோடிக்கணக்கில் உயர்ந்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில் முதல் 10 நாள் சாதனையாக சென்னையில் மட்டும் 8 கோடி, தமிழகத்தில் மொத்தம் ரூபாய் 105 கோடி வசூல்,உலக அளவிலான வசூல் ரூபாய் 205 கோடி என்று தகவல்கள் வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழகம் மட்டுமில்லாமல் கர்நாடகாவில் ரூபாய் 17 கோடியும், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் ரூபாய் 24 கோடியும்,கேரளாவில் ரூபாய் 12கோடியும், வெளிநாடுகளில் ரூபாய் 45 கோடியும்,வட இந்தியாவில் ரூபாய் 4 கோடியும் வசூல் சாதனையை பெற்றுள்ளது. மேலும் கோலிவுட், ஹாலிவுட் என எந்த மொழிகளிலும் படங்கள் வெளியாகாததால் இப்படத்திற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக செல்கின்றனர்.உலக அளவில் கடந்த சில நாட்களில் மிக அதிக வசூல் செய்த திரைப்படம் "மாஸ்டர்" படம் தான் என்று விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News