பிக்பாஸில் வெற்றி பெற்ற ஆரிக்கு கிடைத்த மொத்த தொகை எவ்வளவு தெரியுமா?
பிக்பாஸில் வெற்றி பெற்ற ஆரிக்கு கிடைத்த மொத்த தொகை எவ்வளவு தெரியுமா?

பிக்பாஸ் சீசன்-4 நிகழ்ச்சி 105 நாட்கள் போட்டி நடைபெற்றது. இதில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். ரேகா, சனம் ஷெட்டி, அனிதா, சுசித்ரா, ஆரி, அர்ச்சனா, ரம்யா பாண்டியன், ஜித்தன் ரமேஷ், ரியோ, கேப்ரில்லா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலா, சோம் சேகர் நிஷா, சம்யுக்தா, ஆஜித்,சிவானி, வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியாளர்களில் ஆரி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு டைட்டில் வின்னர் பரிசாக ரூ.50 லட்சம் கிடைத்தது. மேலும் பிக்பாஸ் வீட்டில் 105 நாட்கள் இருந்ததற்கான சம்பளம் ஆகியவை இரண்டும் சேர்த்து வரிப்பிடித்தம் போக மொத்தம் எவ்வளவு தொகை கிடைத்திருக்கிறது என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
பிக்பாஸ் வீட்டில் இருந்த நாட்களில் ஆரிக்கு தினமும் ரூபாய் 85 ஆயிரம் சம்பளம் என ஒப்பந்தம் பேசப்பட்டு இருந்ததாகவும், இதனை அடுத்து அவர் 105 நாட்கள் இருந்ததால் அவருடைய மொத்த சம்பளம் 89 லட்சத்து 25 ஆயிரம் வழங்கப்படும் என தெரிகிறது.
இதில் 30 சதவீதம் வரிப்பிடித்தம் போக 62 லட்சத்து 42 ஆயிரத்து 500 ரூபாய் அவருக்கு சம்பளமாக கிடைக்கும் அதேபோல் அவருக்கு கிடைத்த 50 லட்சம் ரூபாய் டைட்டில் வின்னர் பரிசில் 30% வரிப்பிடித்தம் போக 35 லட்சம் கிடைத்துள்ளது. எனவே சம்பளம் மற்றும் டைட்டில் வின்னர் பரிசு ஆகியவை சேர்த்து ஆரிக்கு கிடைத்த மொத்த தொகை வரி பிடித்தம் போக ரூபாய் 97 லட்சத்து 47 ஆயிரத்து 500 என்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஆரிக்கு கிட்டத்தட்ட ஒரு கோடி கிடைத்துள்ளது.