'ஈஸ்வரன்' படத்தின் ஆடியோ விழாவில் சிம்பு கூறிய வார்த்தை என்ன தெரியுமா?
'ஈஸ்வரன்' படத்தின் ஆடியோ விழாவில் சிம்பு கூறிய வார்த்தை என்ன தெரியுமா?
By : Amritha J
தமிழில் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டு இருப்பவர் நடிகர் சிம்பு. தற்போது ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்து வெளியீட்டிற்கு தயாராக உள்ள நிலையில் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் நீண்ட இடைவெளிக்குப் பின் ரசிகர்கள் மத்தியில் சிம்பு மிகவும் எதார்த்தமாகவும், அர்த்தமுள்ள வகையிலும் பேசியது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சிம்பு விழாவில் பேசியது: கொரோனா ஊரடங்கு நேரத்தில் அனைவருக்கும் ஒரு நெகட்டிவ் தன்மை இருந்த நிலையில் ஈஸ்வரன் படப்பிடிப்பு தொடங்குவதற்குள் ஒரு குறுகிய காலத்தில் ஒரு படத்தில் நடிக்கலாம் என்பதற்காக சுசீந்திரன் அவர்களிடம் இந்த கதையை கேட்டேன். நெகட்டிவ் தன்மையுடன் இருந்த எனக்கு இந்த கதையை கேட்டவுடன் பாசிட்டிவ் எண்ணம் வந்துவிட்டது. நாம் எல்லோரும் மீண்டு வந்து விடலாம் என்ற நம்பிக்கை இந்த கதையை கேட்டவுடன் எனக்கு வந்தது. கதையை கேட்ட எனக்கே பாசிட்டிவ் எண்ணம் வருகிறது என்றால் இதை படமாக பார்ப்பவர்களுக்கு எந்த அளவுக்கு பாசிட்டிவ் எண்ணம் வரும் என்பதை நினைத்து தான் இந்த படத்தில் நான் நடிக்க ஒப்புக் கொண்டேன்.
இப்பொழுது எங்கு பார்த்தாலும் நெகட்டிவ் எண்ணமாகவே உள்ளது. யாரைப் பார்த்தாலும் போட்டி பொறாமை என்பதுதான் அதிகம் உள்ளது. அதிலிருந்து நாம் மீண்டு வர வேண்டும். ஒருவர் தனது உள்ளத்தை சுத்தம் செய்து கொண்டால் போதும், தானாகவே வெளியில் சுத்தமாகிவிடும். நான் பட்ட கஷ்டங்கள் எனக்கு ஏற்பட்ட தடைகள் எல்லாமே எனக்கு உள்ளே இருந்த பிரச்சனை தான் காரணம். அதனை நான் சரிசெய்தவுடன் தற்போது எனக்கு எல்லாமே சரியாகி விட்டது. எனவே உங்கள் உள்ளத்தை மட்டும் சுந்த்தமாக வைத்து இருந்தீர்கள் என்றால் வெளியில் உங்களுக்கு நடக்கும் எல்லாமே பாசிட்டிவ் ஆக இருக்கும் என்று சிம்பு கூறினார்.
மேலும் எல்லோரிடமும் அன்பு செலுத்துங்கள், எல்லோருடனும் சந்தோஷமாக இருங்கள், யார் எந்த அட்வைஸ் சொன்னாலும் கேட்காதீர்கள், உங்கள் மனதிற்கு எது சரியாக தோன்றுகிறதோ அதை செய்யுங்கள், குறிப்பாக சமூக வலைத்தளங்களில் உள்ள நெகட்டிவ்களை சுத்தமாக பார்க்காதீர்கள் என்று சிம்பு இந்த விழாவில் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
@SilambarasanTR_ anna speech
— ✪☞NʘVA☞✪ (@thisisshiva_) January 2, 2021
At #EswaranAudioLaunch 🔥🔥
Vera level pic.twitter.com/gNnZsiAFRD