பிக்பாஸ் வீட்டில் ஆரியிடம், மனைவி கூறியது என்ன தெரியுமா?
பிக்பாஸ் வீட்டில் ஆரியிடம், மனைவி கூறியது என்ன தெரியுமா?

பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் எதிர்த்தாலும் தான் சொல்லும் கருத்தில் நேர்மையாக இருப்பவர் ஆரி. அந்த வகையில் இந்த வாரம் முழுவதும் போட்டியாளர்கள் அனைவருக்கும் ப்ரிஸ் டாஸ்க் நடைபெறுகிறது. எனவே இன்று வெளியான ப்ரோமோவில் ஆரியின் மனைவி மற்றும் குழந்தை பிக்பாஸ் வீட்டிற்குள் வருகின்றனர். ஒருபக்கம் ஆரியின் குழந்தையிடம் ஹவுஸ்மேட்ஸ்கள் விளையாடி கொண்டிருக்கும்போது ஆரியுடன் அவரது மனைவி தனியாக உட்கார்ந்து பேசுகிறார்.
அப்போது அவர், எனக்கு என்ன பிடிச்சதுன்னா நீங்க யாரையும் ஹர்ட் பண்ணவே இல்லை. மேலும் நீங்க வீட்டில எப்படி இருக்கிங்களோ அப்படியே தான் இங்கேயும் இருக்கிங்க. எனக்கு எந்த வித்தியாசமும் தெரியலை. வீட்டில் இருக்குற மாதிரியே இங்கேயும் இருந்தால் நாம் போலியா இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறுகிறார். அப்போது ஆரி தன்னை நினைத்தே பெருமைப்படுகிறார்.
முன்னதாக ஆரியின் குழந்தை தனக்கும் டாஸ்க் வேண்டும் என்று கூற அதற்கு பிக்பாஸ், கன்பெக்சன் அறைக்கு சென்று அம்மாவை கூட்டிட்டு வாருங்கள் என்று கூறியவுடன் ஆரியும் அவரது குழந்தையும் கன்பெக்சன் அறைக்கு சென்று ஆரியின் மனைவியை அழைத்து வருகின்றனர் என்பது போல் ப்ரோமோ இருந்தது. மேலும் இதை பார்த்து ஆரியின் ரசிகர்கள் ஆரி குழந்தை பெயரில் 'ரியா ஆர்மி' என்று உருவாக்கி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
#Day88 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/U8Q55Q42AU
— Vijay Television (@vijaytelevision) December 31, 2020