Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழில் பிக்பாஸ் சீசன்-5 எப்போது தெரியுமா! வெளியான தகவல்!

தமிழில் பிக்பாஸ் சீசன்-5 எப்போது தெரியுமா! வெளியான தகவல்!

தமிழில் பிக்பாஸ் சீசன்-5 எப்போது தெரியுமா! வெளியான தகவல்!
X

Amritha JBy : Amritha J

  |  24 Feb 2021 10:53 PM IST

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே 4-சீசன் வெற்றிகரமாக முடிந்த நிலையில் தற்போது 5வது சீசனுக்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீஸனில் முகேன் மற்றும் நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் டைட்டில் பட்டத்தை வென்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு சீசனும் ஜூன் மாதம் தொடங்கப்படும் நிலையில் கடந்த ஆண்டு மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அக்டோபர் தொடங்கி ஜனவரியில் முடிவடைந்தது.

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான ஆரம்பகட்ட பணிகள் ஆரம்பமாகி விட்டதாகவும் வரும் ஜூன் மாதம் ஐந்தாவது சீசன் தொடங்கும் என்றும் பிக்பாஸ் சீசன்-5வது சீசனையும் கமலஹாசன் தொகுத்து வழங்குவார் என்றும் அவர் தற்போது தேர்தல் பணிகளில் ஏப்ரல் அல்லது மே மாதம் வரை பிசியாக இருப்பார் என்பதால் ஜூன் மாதம் ஐந்தாவது சீசன் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.எனவே இனி வரும் நாட்களில் பிக்பாஸ் 5-வது சீசனில் யார் கலந்து கொள்வார்கள் என்ற பட்டியலும் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News