Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியன் 2 படம் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?

கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை பட குழுவினர் திட்டமிட்டு இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்தியன் 2 படம் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?

KarthigaBy : Karthiga

  |  21 Jun 2023 4:15 PM GMT

கமலஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் கிரேன் சரிந்து விபத்து, கொரோனா, இயக்குனர் சங்கருடன் தயாரிப்பு தரப்பு மோதல் வழக்கு என்ற பல பிரச்சனைகளால் முடங்கியது. இந்தியன் -2 படப்பிடிப்பு தொடங்குமா? என்ற சந்தேகங்கள் எழுந்த நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பை மீண்டும் ஆரம்பித்தனர். கமலஹாசன் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்த வந்தார். விறுவிறுப்பாக நடந்த படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

கமலஹாசன் சம்பந்தமான காட்சிகள் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த மாதம் இறுதிக்குள் முழு படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னொரு புறம் டப்பிங் ,கிராபிக்ஸ் , இசை கோர்ப்பு உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன. இந்தியன் படத்தை பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு கொண்டு வர படகுழுவினர் திட்டமிட்டு இருப்பதாகவும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பாபி சிம்ஹா சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News