Kathir News
Begin typing your search above and press return to search.

கே.ஜி.எப் படத்தின் 3ம் பாகம் எப்போது தெரியுமா?

கன்னட நடிகர் யஷ் நடிப்பில் 2018ம் ஆண்டு பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப் படத்தின் முதல் பாகம் அனைத்து மொழிகளிலும்

கே.ஜி.எப் படத்தின் 3ம் பாகம் எப்போது தெரியுமா?

Mohan RajBy : Mohan Raj

  |  10 Jan 2023 6:13 AM GMT

கன்னட நடிகர் யஷ் நடிப்பில் 2018ம் ஆண்டு பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப் படத்தின் முதல் பாகம் அனைத்து மொழிகளிலும் இந்தியா முழுவதும் வெளியாகி வெற்றி பெற்றது. அந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததோடு, அதைத்தொடர்ந்து கே.ஜி.எப் படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி 1200 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்து இன்னும் பெரிய அளவில் வெற்றி பெற்றது.




இந்நிலையில் நேற்று நடிகர் யஷின் பிறந்தநாளை முன்னிட்டு கேஜிஎப் படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் அவருக்கு, கே.ஜி.எப் படம் அற்புதமான ஒன்றாகும் விரைவில் இன்னொரு மான்ஸ்டரும் காத்திருக்கிறது. கனவு கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்ற யஷ்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று ஒரு போஸ்டர் வெளியிட்டு ஒரு பதிவு போட்டுள்ளது.




மேலும் அப்படக்குழு இந்த ஆண்டு அற்புதமான ஆண்டாக அமையட்டும் விரைவில் கே.ஜி.எப் படத்தின் மூன்றாம் பாகம் உருவாக போகிறது என்று தெரிவித்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News