Begin typing your search above and press return to search.
தளபதி விஜயின் டீசர் வெளியீடு ? - உற்சாகத்தில் ரசிகர்கள்..!
தளபதி விஜயின் டீசர் வெளியீடு ? - உற்சாகத்தில் ரசிகர்கள்..!

By :
தளபதி விஜய் தற்போது நடித்து முடித்துள்ள படம் "மாஸ்டர்".இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு தயாராக உள்ள நிலையில் கொரோனா காரணத்தால் படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 'ஏப்ரல் 9'ஆம் தேதி படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருந்தது.
ஆனால் கொரோனா காரணமாக 6 மாத காலங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. கொரோனா காரணத்தால் பல்வேறு படங்கள் OTT-யில் வெளியாகியுள்ளன.அந்த வகையில் மாஸ்டர் படம் குறித்து தளபதி விஜயின் ரசிகர்கள் படம் தியேட்டரில் வெளியாகும் OTTT-யில் வெளியாகுமா? என்று விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.இதற்கு பதிலளிக்கும் விதமாக மாஸ்டர் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், படம் தியேட்டரில் மட்டுமே ரிலீஸ் ஆகும் என்றும் கூறியிருந்தார்.அந்த வகையில் தீபாவளிக்கு இன்னும் இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில் மாஸ்டர் படத்தின் டீசர் வெளியிடுவார்களா என ரசிகர்கள் ஆர்வத்தில் இருந்தனர்
அவர்களின் ஆசையை நிறைவேற்றும் விதமாக இன்று மாலை 6 மணி அளவில் மாஸ்டர் படத்தின் டீசர் வெளியிடப்படும் என்று சினிமா பிரபலங்கள் பலரும் அவரது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவினை வெளியிட்டுள்ளனர்.
இந்த அறிவிப்பைப் பார்த்து விஜய் ரசிகர்கள் அனைவரும் அதிக மகிழ்ச்சியுடன் எப்பொழுது வெளியாகும் என்று எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.இதற்கு ஆதரவு தரும் விதமாக ரசிகர்கள் அனைவரும் அவர்களது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.Next Story