Kathir News
Begin typing your search above and press return to search.

'வாரிசு' இசை வெளியிட்டு விழா எப்போது ஒளிபரப்பு தெரியுமா?

இன்று மாலை நடைபெறவிருக்கும் வாரிசு வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் அனுமதிக்கப்படாதது குறித்து ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.

வாரிசு இசை வெளியிட்டு விழா எப்போது ஒளிபரப்பு தெரியுமா?

Mohan RajBy : Mohan Raj

  |  24 Dec 2022 10:54 AM GMT

இன்று மாலை நடைபெறவிருக்கும் வாரிசு வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் அனுமதிக்கப்படாதது குறித்து ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.





இன்று மாலை நடைபெறவிருக்கும் வாரிசு வெளியீட்டு விழாவில் அனுமதி சீட்டு வாங்கி கலந்து கொள்ள வேண்டும் என விஜய் ரசிகர்கள் பலரும் முயற்சித்து வருகின்றன ஆனால் மாவட்டத்தில் தலா 100 பேருக்கு மட்டும் அனுமதி என ரசிகர் மன்றத்தில் கூறிவிட்டதால் பலரும் பெரும்பாலாஅதிருப்தியில் உள்ளனர்.

இருந்தாலும் நேரிலாவது வரமுடியவில்லை அதனால் youtube சானலில் லைவ் பார்க்கலாம் என ஆசைப்பட்டவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி உள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஒரு தனியா தொலைக்காட்சியில் பெரும் விலைக்கு வாங்கி விட்டதாகவும் 2023 புத்தாண்டு நிகழ்ச்சியாக அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பும் திட்டம் உள்ளதாகவும் கூறப்பட்டது.





இதனால் வாரிசு வெளியீட்டு விழாவை காண்பதற்கு இன்னும் ஒரு வாரம் காத்திருக்க வேண்டும் என டிக்கெட் கிடைக்காத ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News