பிக்பாஸில் இந்த வாரம் நாமினேஷன் ஆனவர்கள் யார் தெரியுமா.?
பிக்பாஸில் இந்த வாரம் நாமினேஷன் ஆனவர்கள் யார் தெரியுமா.?
By : Amritha J
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று அர்ச்சனா வெளியேற்றப் பட்டதை அடுத்து ரியோ, சோம், கேபி ஆகியோர் வருத்தமாக இருந்தனர்.இந்நிலையில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரமும் நடைபெறுகிறது. இன்றைய புரோமோவில் போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் நாமினேஷன் செய்து கொள்கின்றனர்.
ஷிவானி மற்றும் ஆஜித் ஆகிய இருவரையும் சோம் நாமினேட் செய்கிறார். இவர்கள் இருவருமே பாலாவை நம்பிய விளையாடி வருகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் இருவரையும் அனிதாவும் நாமினேட் செய்கிறார். இந்த 78 நாட்களில் ஷிவானி என்ன செய்திருக்கிறார் என்று எனக்கு தெரியவில்லை என்று அனிதா காரணமாக கூறுகிறார்.பாலாஜி சோம்சேகரை நாமினேட் செய்கிறார். கேபி மற்றும் ஆரி ஆகிய இருவரையும் ரம்யா நாமினேட் செய்கிறார்.
மற்றவர்களின் பேச்சை புரிந்து கொள்ளாமல் ஆரி இருப்பதாக ரம்யா காரணமாக கூறுகிறார்.கேபி மற்றும் ஷிவானியை ஆரி நாமினேட் செய்கிறார். அனிதா மற்றும் ஆரியை ஆஜித் நாமினேட் செய்கிறார். மேலும் கேப்ரில்லா அனிதாவையும் ரியோ ஆரியையும் நாமினேட் செய்கின்றனர்.மொத்தத்தில் இந்த வார நாமினேஷனில் ஷிவானி, ஆஜித், அனிதா, ஆரி, கேபிரில்லா ஆகிய 5-நபர்கள் நாமினேட் செய்யப்பட்டிருப்பது தெரிகிறது.இது பற்றிய முழுமையான தகவலை இன்றைய நிகழ்ச்சியில் காண்போம்.
#Day78 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/MbWaowUtvw
— Vijay Television (@vijaytelevision) December 21, 2020