Kathir News
Begin typing your search above and press return to search.

ஏ.கே-62 -வில் அஜித்தின் ஜோடி யார் தெரியுமா?

அஜித் குமாரின் 62 ஆவது படத்தில் ஜோடியாக நடிக்க ஐந்து முக்கிய நடிகைகள் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.

ஏ.கே-62 -வில் அஜித்தின் ஜோடி யார் தெரியுமா?

KarthigaBy : Karthiga

  |  12 May 2023 10:30 AM GMT

அஜித் குமாரின் 62 வது படத்தை இயக்குவதாக இருந்த விக்னேஷ் சிவன் மாற்றப்பட்டு டைரக்டர் மகிழ் திரு மேனிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைத்துள்ளனர். படப்பிடிப்பை இந்த மாதம் இறுதியில் தொடங்க திட்டமிட்டுள்ளனர். இந்த படம் முழுக்க அதிரடி திரில்லர் கதையம்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது .ஏற்கனவே பைக் சுற்று பயணத்தில் இருந்த அஜித் குமார் அதை முடித்துவிட்டு படப்பிடிப்பில் பங்கிகேற்க தயாராகி வருகிறார்.


இன்னொரு புறம் விடாமுயற்சி படத்தில் நடிக்க உள்ள இதர நடிகர் நடிகை தேர்வு ஓசை இல்லாமல் நடந்து வருகிறது. இந்த படத்தில் அஜித்குமாருக்கு ஜோடியாக நடிக்க போவது யார் ?என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது .திரிஷா கங்கனா ரணாவத், கத்ரீனா கைஃப், கரீனா கபூர் ஆகிய ஐந்து நடிகைகள் பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . இவர்களில் ஒருவரை தேர்வு செய்ய ஆலோசனை நடக்கிறது . ஐஸ்வர்யா ராய் ஏற்கனவே கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்திலும் திரிஷா, ஜி கிரீடம் ,மங்காத்தா படங்களிலும் அஜித்துடன் நடித்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News