பிக்பாஸ் வீட்டின் இந்த வார கேப்டன் யார் தெரியுமா..?
பிக்பாஸ் வீட்டின் இந்த வார கேப்டன் யார் தெரியுமா..?

பிக்பாஸ் வீட்டில் இன்று வந்த முதல் ப்ரோமோவில் இந்த வார கேப்டன் தேர்வு செய்வதில் போட்டிகள் வித்தியாசமாக நடைபெற்று வந்தன. கடந்த வார கேப்டனாக ஆரி இருந்த நிலையில் அடுத்த வாரத்திற்கு கேப்டன் தேர்வுக்கு ஹவுஸ்மேட்ஸ் கேபிரில்லா, ஆஜித், நிஷா ஆகியோர் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இந்த வாரம் முழுவதும் தீபாவளியை முன்னிட்டு பல சுவாரசியமான நிகழ்வுகளும் வைக்கப்பட்டன. அதில் அவர்களுக்கு 'பாட்டி சொல்லை தட்டாதே' என்ற டாஸ்க் வைக்கப்பட்டது. அந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் அனைவரும் தவறாக நடந்துகொண்டதால் அவர்களுக்கு ஜீரோமதிப்பெண் வழங்கப்பட்டது.
அதனால் போட்டியாளர்கள் அனைவரும் மிகவும் வருத்தத்துடன் காணப்பட்டனர். இந்நிலையில் தற்போது வந்த இரண்டாவது ப்ரோமோவில் கயிற்றில் கட்டப்பட்டுள்ள பலூன்களை தலையால் மோதி உடைக்க, அதிலிருந்து கிடைக்கும் நாணயங்களை யார் அதிகம் எடுக்கிறார்களோ அவரே இந்த வாரம் கேப்டன் என பிக்பாஸ் அறிவிக்கிறார்.
இதில் ஆஜித் தவறாக செய்ய நிஷா, கேபி இருவரும் அட்டகாசமாக ஆடுகிறார்கள். இதில் 27 நாணயங்களுடன் நிஷா வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.